Sunday, May 11, 2014





7

மாலையுடன் சிரித்த தந்தையை பார்த்தபடியே எழுந்து வந்தாள் அபி. 

அந்த ஹால் முழுவதும் இப்போது மாறியிருந்தது. சுபத்திரா திரும்ப வந்ததும் வீட்டுக்கே ஒரு அலுவலக கண்டிப்பு வந்திருந்தது. செல்வியை தவிர அனைவரும் புதியவர்கள்! SAS இல் சுபத்ரா முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தார். வீட்டிலும் அபிக்கு அத்தனை கெடுபிடிகள்! கட்டாய சமையல்கல்வி முதற்கொண்டு தோற்றம் வரை! பியூட்டி பார்லரைக்கண்டாலே அலறி ஒடுபவளுக்கு பூச்சுக்களின்றிய நேர்த்தியான பெண்ணாயும் அவைகள் தான் மாற்றும் என்று கற்றுக்கொடுத்தார். எல்லாம் அதனதன் இடத்தில் தான் இருக்கிறது, நாம் தான் எடுத்துக்கொள்வதில்லை! சுபத்ரா அடிக்கடி சொல்வார்.

பாப்பா..என்ன இப்பிடிப்பண்ணிட்டே???

என்ன???

அம்மா காலைல எழுப்ப எழுப்ப எழும்பலையாமே! வாய்க்குள்ளே திட்டிகிட்டாங்க! அநேகமா ராத்திரிக்கு உன் கூட பேசுவாங்க னு நினைக்கிறேன்!

வேணும் னு தான் எழும்பாம கிடந்தேன்! எழுந்து என்ன பண்றது சொல்லு. ராத்திரிக்கு சீக்கிரமே தூங்கிடறேன், பீவர் னு சொல்லிடு!

அவளையே அதிசயமாய் பார்த்த செல்வி என்ன பாப்பா ஆச்சு உனக்கு? ஒரு நிமிஷம் உக்கார மாட்டே முன்னெல்லாம்! இப்ப என்னடான்னா எல்லாம் தலை கீழா இருக்கு!முணு முணுத்துக்கொண்டே செல்வி அகன்று விட்டாள்.

அவளுக்கே அப்படித்தான் தோன்றுகிறது! காம்பிங் போகிறேன் என்று சொல்லிக்கிளம்பியவள் பாதியில் திரும்பி வந்தாள். 

கமரா வை தூக்கிக்கொண்டு ஜூலியனை கூட படம் எடுக்கிறாள். புகைப்பட தளங்கள் எல்லாவற்றையும் துளாவுகிறாள். னன் என்ற கையெழுத்து கண்ணில் படாதா? என்று தான்!

அந்த கன்னக்குழி சிரிப்புடன் வந்த நெடியவன் இப்போதெல்லாம் அடிக்கடி கண்ணில் வருகிறான். 

அவனைக்குறித்த எந்த தொடர்பும் அவளிடம் இல்லை.

அன்று போனவன் தான். பிறகு கண்ணிலேயே படவில்லை! 

அத்தனை பிரச்சனைகளில் அவள் தான் குழம்பியிருந்தாள், அவளை மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவனுக்கு தோணவே இல்லையா?

அன்னையிடம் கேட்கவும் துணிவில்லை. அவனுக்கு அவள் மேல் அப்படியொரு ஈர்ப்பு இல்லையென்றால்????? ஐயோ!!!!!

நின்றால் நடந்தால் இந்த எண்ணங்களே வர அவள் எதிலும் ஒன்றமுடியாமல் தவித்தாள்.

அவளது தனியறைக்குள் நுழைந்தாலே அந்த இரண்டு நாள் ஞாபகங்களும் வந்து சூழ்ந்து கொள்ளும், அறை முழுவதும் அவன் அவளை எடுத்த புகைப்படங்கள் ஒட்டிக்கிடந்தால் வராமல் என்ன செய்யும்?

அவனுக்கு அப்படியெல்லாம் இல்லையா? இருந்திருந்தால் வர மாட்டானா? அம்மா எவ்வளவு நெருக்கம் அவனுக்கு! அப்படி அவளை பிடிக்குமென்றால் அம்மாவை பார்க்கிறேன் பேர்வழி என்று வர மாட்டானா? ஆண்கள் அப்படித்தானே செய்வார்கள்? இவன் மனதில் வேறேதும் உணர்வுகள் இல்லையோ? குழப்பங்கள் சூழ்ந்துகொள்ள சிந்தித்த படியே இருந்தாள்.

i cant beg for love!
கண்ணீர் துளிகள் முட்டி வழிய எதுகெடுத்தாலும் அழறதை முதல்ல நிறுத்து!சுபத்ராவின் கடினக்குரல் காற்றில் கேட்டதுபோல் அவசரமாய் கண்களை துடைத்துக்கொண்டாள் அவள்.

*****************



அம்மா!!!

சுபத்ரா போட்ட வெடிகுண்டை இன்னும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை!

ம்ம்..நான் வேறு என்ன செய்ய முடியும்? எதிலும் ஆர்வம் காட்டுகிறாய் இல்லை! ஒழுங்காக சாப்பிடுவதும் இல்லை. கம்பனிக்கு வா என்றால் அதுவும் பிடிக்கவில்லை! நாயுடன் விளையாடிக்கொண்டு எவ்வளவு காலம் இருப்பாய்? பெண்களுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்ய வேண்டும். இப்போதே பார்க்க தொடங்கினால் தான் அடுத்த வருடம் செய்ய முடியும்! அதனால் தான் பார்க்க சொன்னேன்! உன் விருப்பம் இன்றி எதுவும் நடக்காது கவலைப்படாதே! அவளையே ஆழமாய் பார்த்துக்கொண்டு சுபத்திரா பேச முகம் வெளிறிப்போய் விட்டது அபிக்கு!

எனக்கு இப்போது திருமணம் வேண்டாம்!!!

அது தான் ஏன்?

பலபல வாக்குவாதங்களின் பின் அனந்தன் தானே? என்று அன்னையே கேட்க திகைத்தாலும் உடனே ஒத்துக்கொண்டாள்.

அவர் மனசில என்ன இருக்குனு தெரியலைம்மா!!!

போய் பேசு!!

அபி!!!!

இதோ பார்! அடிக்கடி சொல்வேனே, நமக்கு என்ன வேணுமோ, நாம தான் எடுத்துக்கணும்! உங்கப்பாக்கு என்னை விட பிரண்ட்ஸ் முக்கியமானு நான் ஈகோ பார்த்தேன், அதனாலே எங்களுக்குள்ள பிரிவு வந்தது. அவங்க ரெண்டு பேராலையும் எங்களை ஈசியா பிரிக்க முடிஞ்சது! இவ்வளவு கஷ்டமும் நமக்கு வந்தது..எல்லாத்துக்கும் காரணம் நாங்க ரெண்டு பெரும் ஈகோ பாத்தது தான்! என் நிலைமை உனக்கு வரக்கூடாது! போய் அவனோட பேசு! உன் மனசுல இருக்கறதை சொல்லு! அவன் ஒத்துக்கலைன்னா சரி..நமக்கு ஒத்துவரல னு தைரியமா ஏத்துக்கறது தானே! நான் எப்பவும் உன்னை எதுக்கும் வற்புறுத்த மாட்டேன்! 

அனந்தன் இப்போ எங்கே?

அவனும் இங்கே தான் இருக்கிறான்! எங்கும் போகவில்லை! மலைச்சேரி என்று ஒரு ஊரில் காம்ப்பிங்கில் இருக்கிறான்! மலைசார் வாழ்வியல் னு ஏதோ சொன்னான் சொல்லும் போதே சுபத்ராவின் முகத்தில் சிரிப்பு!

யார் கூடப்போவே? நான் வரணுமா?

தனியா போய் ரொம்ப நாள்மா, ஜூலியனை அழைச்சிட்டு போறேன்! அந்த சிரிப்பு அபி முகத்திலும் தொற்றிக்கொண்டிருந்தது இப்போது!


No comments:

Post a Comment