Sunday, May 11, 2014





8

தோளில் பக்பாக் லேசானபாரத்துடன் இருக்க முட்டிக்கும் கொஞ்சம் கீழே நீண்டிருந்த பான்ட், மேலே சிவப்பு நிற டீஷர்ட்டுடன் கொஞ்சம் பெரிய சாதி நாய் பின் தொடர ஆட்டோவில் இருந்து இறங்கிய பெண்ணை கொஞ்சம் வித்யாசமாய் தான் பார்த்தனர் அந்த வழியில் வந்த கிராமமக்கள்!

மனசு முழுக்க இப்போது உற்சாகம் நிரம்பிக்கிடந்தது. எக்காரணம் கொண்டு தான் வருவதை அவனுக்கு அறிவிக்க கூடாது என்று அன்னையிடம் சொல்லிவிட்டாள். தன் தொலைபேசி இணைப்புக்கள் எல்லாவற்றையும் துண்டித்திருந்தவன் சுபத்ராவிடம் மட்டும் அந்த பெரியவருடைய இலக்கத்தில் இருந்து பேசுவான். அவசரத்தொடர்புக்கென அவரது முகவரியும் இருக்க பிறகென்ன என்று கிளம்பி வந்துவிட்டாள் அபி! 

போனி டைல் இடப்பட்டிருந்த கூந்தல் இப்போது கொண்டையாய் சுருங்கியிருக்க லேசான களைப்பு உடலைத்தள்ளியது.வழியில் வந்த எல்லோரையும் பார்த்து சிரித்தவள் தம்பித்துரை வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்தாள். இன்னும் சற்று தூரம் நடக்க வேண்டும் என்று சொன்னதால் வழியில் இருந்த டீக்கடையில் எதையாவது வயிற்றுக்கு ஈய வேண்டும் போலிருக்க தாத்தா என்றழைத்தபடி உள்ளே நுழைந்து விட்டாள்.

தனக்கு வடையொன்றையும் டீயையும் வாங்கிக்கொண்டவள் ஜூலியனுக்கு கொஞ்சம் பால் வாங்கித்தந்தாள். ஒரு வாய் டீயிலேயே புரிந்து போனது அந்தப்பெரியவருக்கு சர்க்கரை வியாதிஎன்று! அவள் பயந்ததை போலவே ஜூலியன் திரும்பிக்கொள்ள அந்தப்பெரியவரிடம் ஐஸ் வைத்து அவர் முறைத்துக்கொண்டே கொடுத்த சீனியை கலந்து கொடுத்து அவனை குடிக்க வைப்பதற்குள் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது அபிக்கு!

**************


சுற்றிலும் மலைகளும் ஈரக்காற்றும் நீர்வீழ்ச்சி சத்தமும் பூத்துக்கொட்டிய மஞ்சள் மரங்களுமென ரம்யமான ஊர் அது! ஈரக்காற்றை உள்ளிழுத்து அனுபவித்தபடியே நடந்தவள் அந்த பெரியவரின் வீட்டை ஒருவாறு கண்டடைந்தாள். அந்த ஊரிலேயே கொஞ்சம் பெரிய பணக்காரராய் இருக்க வேண்டும். கல்வீடு அவர்களுடையது! 

கணவனும் மனைவியுமாய் யாரென்றே தெரியாத அவளை நெடுநாள் பழகியவள் போல வரவேற்ற பாங்கு இன்னும் உலகில் மனிதம் வாழ்வதை சொல்லிற்று! சாப்பிட்டு விட்டு செல்ல வற்புறுத்தியவர்களை ஒருவாறு சமாளித்து வெறுமே குளித்து உடை மாற்றிக்கொண்டு அவர் காட்டி விட்ட ஒற்றையடிப்பாதையில் ஜூலியனோடு நடக்க ஆரம்பித்தாள் அபி!

கையில் உணர்வுப்பார்சல் கொஞ்சம் கனமாய் இருந்தது! மூவருக்கானது அல்லவா?

காலையும் இரவும் தான் ஊருக்குள் சாப்பிட வருவானாம்! மனம் கேட்காமல் மதியத்துக்கு நானே சாப்பாடு கொண்டு போவதுண்டு, என்று சொன்ன பெரியவர் அவளிடம் மூன்று பேருக்கும் சேர்த்து பெரும் கூடையொன்றை கொடுத்தனுப்பி விட்டார்.

சருகுகள் முட்கள் எல்லாவற்றையும் தாண்டியபடி நடந்துகொண்டேயிருந்தவளின் இதயம் நீர்வீழ்ச்சி சத்தம் மிக அருகே கேட்கவும் தாளந்தப்ப ஆரம்பித்தது! நீர்வீழ்ச்சி அருகில் தானே அனந்தன் குடில் போட்டிருப்பதாக சொன்னார் அந்த பெரியவர்!

கூடலாய் கிடந்த மரமொன்றின் கீழாக புகுந்து வெளிவந்தவள் தன் பரபரப்பையும் மீறி கன்னத்தில் கைவைத்து ரசித்தாள். பெரிய மரங்களைவிட்டுவிட்டு மீதி அனைத்தையும் துடைத்து வைத்தது போல சுத்தம் செய்திருந்தவன் நட்ட நடுவே குடில் அமைத்திருந்தான். மூலையாக நின்ற மஞ்சள் மரமொன்று குடிலுக்கு பூக்களை வாரி இறைத்திருக்க குடிலின் முன்னே மர பெஞ்சுகளை கூட அமைத்திருந்தான் அனந்தன்! கிட்டத்தட்ட ஒரு முனிவரின் தபோவனம் போல தான் இருந்தது அது! ஒரு மாதமாய் இருப்பதால் உடலுக்கு வேலை கொடுத்திருக்கிறான்! கெட்டிக்காரன்தான்! மனம் அவனுக்கு சான்றிதழ் வழங்கியது!

ஆனால் அவன் எங்கே?

கண்களை அங்கும் இங்கும் சுழற்றியவள் குடிலுக்குள்ளேயும் தேடினாள். ம்ஹ்ம் அவனைக்காணோம்! கொண்டுவந்த பாக் உணவை குடிலுக்குள் வைத்து விட்டு ஜூலியனை காவல் வைத்தவள் அவனைத்தேடி நீர்வீழ்ச்சிப்பக்கமாய் நடந்தாள்.

பெரிய பெரிய கற்கள் குவிந்து கிடக்க மெதுவாய் கால் வைத்து ஏறி அப்படியே முன்புறம் வர மறுபுறமாய் கல்லில் சரிந்து கிடந்தவனும் திரும்பிப்பார்த்தான்!

கமரா ஒரு பாறையில் கிடக்க, சட்டையில்லாத உடல் அவன் மெலிவை நன்றாகவே காட்ட இடுப்பில் மட்டும் பான்ட் தொற்றிக்கொண்டிருந்தது. துள்ளல் மறந்த கண்கள் கலங்கிக்கொண்டு அவளையே வெறித்தன!

என்ன இப்படி ஆயிட்டான்? அபிக்கும் கண்கள் கலங்குவது புரிந்தது.

மெல்ல பாறையிலிருந்து எழுந்தவன் கைகளோ இறுக்கமாய் பொத்தியபடி பக்கம் ஒன்றாய் கிடக்க கண்கள் அவளைவிட்டு விலகவில்லை! 
அங்கே பாஷை தேவைப்படவில்லை! இத்தனை நாளிருந்த எண்ணமெல்லாம் அபத்தமாய்ப்பட்டது! எந்த சந்தேகங்களும் இல்லை! அன்னையிடம் அன்று இருந்த தயக்கம் கூட இன்றி அனந்தன் என்று கூவியபடி அவன் நெஞ்சில் விழுந்தாள் அபி. ஒரு கணமே தயங்கிய அவன் கைகள் மறுகணம் அவளை இறுகச்சுற்றி எலும்பு நொறுங்குவது போல அணைத்துக்கொண்டவனோ அவள் முகம் பற்றி அவசரமாய் முத்தமிட ஆரம்பித்தான். மூச்சுக்கூட தேவைப்படாத முத்தச்சரங்களுக்கு நடுவில் என்ன நினைத்தானோ அவள் முகத்தை பிடித்து தூர நிறுத்தி இப்போது தான் என்னை பார்க்க வேணும்னு தோன்றியதா?” என்று அவளை முறைத்தான். பதிலுக்கு நிமிர்ந்து அவனை முறைத்தவளோ உங்களுக்கு இப்போ கூட தோணலையேஎன்று பதிலடி கொடுத்து விட்டு அவன் விட்ட முத்தச்சரத்தை பாதியிலிருந்து தொடர்ந்தாள்.

முத்தங்களே களைத்துப்போன பின் அவளை தூக்கிகொண்டவன் இளஞ்சிவப்பு பூ மரத்தின் கீழே நிழலாயிருந்த பாறையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளையும் தன் மடியில் அமர்த்திக்கொண்டான். காலுக்கடியில் ஓடிய நீரின் சத்தத்தை அனுபவித்தபடி இருந்தவளை நம்பவே முடியல அபிம்மா என்ற அனந்தனின் குரல் கவனம் கலைத்தது!

எது? இவ உங்களை ஞாபகம் வச்சு துரத்திட்டு வருவான்னா? அவள் முகத்தில் இப்போது கோபம்!

ஆமா உனக்கென்றே அந்த பாடுபட்டு தேடிவந்தவனை அப்படி மறந்துட்டு எங்கேயோ பார்த்த முகம் என்று சொன்னவ தானே நீ! நீ பேசாதே! பழைய அனந்தன் திரும்பியிருந்தான்!

சும்மா கதை விடாதீங்க! அம்மாக்கு ஹெல்ப் பண்ண தானே வந்தீங்க?

ஞான சூன்யமே! உங்க அம்மாக்கு நான் என்ன கிளாஸ் மேட்டா? எங்க ரெண்டு பேருக்கும் நீ தான் நடுவுல பொதுவா இருந்த! பையன் தன் பொண்ணு மேல பைத்தியமா இருக்கான் னு அவங்களுக்கு செகண்ட் மீட்டிங் லையே தெரிஞ்சு போச்சு! செம ஸ்மார்ட் லேடி!

சும்மா அடிச்சு விடாதீங்க சரியா? பைத்தியமாம்!

நீ நம்பினா நம்பு நம்பாட்டி போ! நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் உன்னை! அப்பா கிட்ட இருந்தா கெட்டுப்போய்டுவேன் னு தாத்தா என்னை திரும்ப அனுப்பலை! உங்கம்மாவை கொன்னுடாங்க னு தாத்தா தான் சொன்னார். எல்லாம் கேட்டு கேட்டு உன்னை பற்றி நினைக்குற தகுதியே எனக்கு இல்லைன்னு நினைச்சிட்டிருந்தேன்! ஆனா என்னால மறக்கவே முடியலை. என்னை மாதிரியே நேச்சர் ல இண்டரஸ்ட் உள்ளவளா நீ வளர்ந்ததும் எனக்கு சந்தோஷம்! உன் போட்டோஸ் என்கிட்டே எவ்வளவு இருக்கு தெரியுமா? ஒவ்வொரு காமப் லையும் நீ அடிக்குற கூத்து பாத்து பாத்து சிரிப்பேன்!

பொய் சொல்லாதீங்க! போட்டோலாம் யார் தருவா உங்களுக்கு!

உன் பெஸ்ட் பிரன்ட் எனக்கும் பிரன்ட்! அவன் கண்ணடித்துச்சிரித்தான்.

மைக்கல்????????????????????

ம்ம்ம்ம்...ஹா ஹா ஹா என் ரூம் மேட்டா இருந்தான். நான் யார்னு தெரியாமலேயே உன்னை பற்றி பேசிட்டே இருப்பேனா கண்டு பிடிச்சிடான். பிறகு எனக்கு இன்போர்மேஷன் தர்றதெல்லாம் அவன்தான்! முறைக்காதம்மா! கடைசியா நான் வந்ததெல்லாம் அவனுக்கு தெரியாது

உனக்கு வயசு வர வர எனக்கு பயமாவே இருந்தது! யாருக்காவது கல்யாணம் பண்ணி குடுத்துருவாங்களோ னு! எங்கப்பாக்கு கூட அப்பிடியொரு ப்ளான் இருந்துது. நமக்கு கல்யாணம் பண்ணி வச்சா சொத்தெல்லாம் வந்துடுமே ன்னு! எனக்கு புடிக்கலை னு சொல்லிட்டேன்! நீ என்னை மட்டும் எப்படி நம்புவே? எனக்கு தகுதியே இல்லை அப்டியிப்பிடி ஆயிரம் குழப்பம்! மறக்கவே முடியாம, சரி நாம உள்ளே வந்தா இவங்களுக்கு ஏதாவது முடிவு கட்டலாம் னு முடிவு பண்ணிட்டு உங்கப்பா கிட்ட பொண்ணு கேட்டேன். அவருக்கு சந்தோஷம்! உன் கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னார்...அதுக்குள்ள.....வன் மௌனமாக

இல்லை அனந்தன்!!! அவர் என் கிட்ட பேசின கடைசி விஷயம் அதுதான்! அதோட தான் போன் கட்டாச்சு! விசும்ப ஆரம்பித்த அவளுடைய முதுகை வருடிக்கொடுத்தபடி ஆறுதலாய் இருந்தவன் 

உனக்கு ஆபத்து என்றதும் எவளவு பயந்தேன் தெரியுமா? என்றபடி மீண்டும் இறுக்கிக்கொண்டான் அவளை!

நான் யார்னு சொன்னா நீ நம்ப மாட்டியேமா, உனக்கு என்னை ஞாபகம் வரும்னு ஒரு நப்பாசை இருந்திச்சு, அப்படி வந்தா எல்லா கதையையும் சொல்லிருப்பேன்! உனக்கு தான் ஞாபகமே இல்லையே!
அதோட என் முயற்சி என்ன ஆகும் னு எனக்கே நம்பிக்கை இல்லாதப்போ என்னனு சொல்றது! 
அப்பா பண்றது புடிக்காம வீட்டை விட்டு போனவன் மறுபடியும் என்ன சொல்லி உள்ள வர்றது?அதுதான் அவங்களை நம்ப வைக்க அந்த உயிலை திருடிட்டு போனேன்! ரொம்ப கஷ்டப்படுத்திட்டனா கண்ணம்மா?அவள் தோள்களில் பின் புறமாக தலைவைத்து கேட்க அவள் உருகிப்போனாள்.

இவ்வளவு பண்ணிட்டு எப்பிடிம்மா மறுபடியும் வர்றது??? காரணமே இல்லாமல் அவன் குற்ற உணர்ச்சியில் தவிப்பது பொறுக்காமல் அவனை இழுத்து தன்னோடு சாயத்துக்கொண்டவள சற்றுநேரம் அப்படியே இருந்தாள்

அனந்தன் உங்கப்பா....நான் வேணும் னா எங்களுக்கு எதுவும்.....அவள் சொல்ல முன்னமே அவள் வாயைப்பொத்தியவன் 

நீ இந்த வார்த்தை சொன்னதே போதும் கண்ணம்மா. இவங்க பண்ணினது சாதாரண திருட்டு இல்லை. அந்த அப்பாவி மனுஷனுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுக்கும் காரணம் இவங்க தானே! உன்னை, உங்கம்மாவை.......தண்டனை தேவை அபிம்மா...அனுபவிச்சாவது திருந்துறாங்களா பார்க்கிறேன்! திருந்தி வந்தார்னா நான் ஏத்துக்கலாம், இனிமேல் இந்த பேச்சு வேண்டாம் சரியா??

என்ன தான் சொன்னாலும் ரொம்ப நாள் நினைச்சுட்டிருந்தேன்னு சொன்னிங்க! ஒரு தடவை கூட பாக்கணும்னு தோணவேயில்லை! மனமெல்லாம் ஆனந்தத்தால் நிறைந்திருந்தாலும் அவன் மனதை திருப்புவதற்காய் கேட்டாள்!

நான் குடுத்த கிப்டை கூடவே வச்சு சுத்திக்கிட்டு இப்பிடி சொல்றியேடி என்று சிரித்தான் அவன்!

என்ன கதையா விடறீங்க?

மண்டைக்குள் கொஞ்சம் மசாலா இருந்தால் சொல்லு பார்க்கலாம்!!!

ஒருகணம் சிந்திக்க பிளாஷ் அடித்தது அபிக்கு. ஜூலியனா????????????????????????????????????????????????

ஹா ஹா ஹா அவன் பேர் டைகர்டி! நான் ரெண்டு மாசம் வளர்த்தேன் அவனை! ஹா ஹா ஹா 

அடப்பாவி மைக்கேல்!!!!!!!!!!!!!!!!!!!

ஹா ஹா ஹா 

***************


ஜூலியன் ச்சே ச்சே டைகரின் வரவேற்பு எல்லாவற்றையும் அனந்தன் வாங்கி முடித்து மூவருமாய் அவள் கொண்டு வந்த உணவை உண்டு முடித்து அப்பாடா என்று சாய்ந்திருந்த போது
லேப்டாப்பில் தான் ஒருமாசமாய் எடுத்த புகைப்படங்களை காட்டினான் அனந்தன். அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு தொங்கிய படி புகைப்படங்களை பார்த்தவளுக்கு தன்னவன் தனிமை தேடி வந்த நேரத்திலும் எப்படி உழைத்திருக்கிறான், அவன் புகைப்படத்துறையை எவ்வளவு நேசிக்கிறான் என்பது அந்த புகைப்படங்களில் புரிந்தது.

மலைவாழ் உயிரினங்களை பற்றி செய்த தொகுப்பு என்றும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிந்து விடும் என்றும் அனந்தன் பேசிக்கொண்டிருக்க பின்னாலிருந்தவளுக்கு வேறு எண்ணங்கள்!

அனு!

அடிபடுவ..நான் என்ன பொண்ணா???

ஹி ஹி

சரி நான் கேக்கறதுக்கெல்லாம் ஒகே சொல்வீங்களா?

கேள்வியை பாத்துட்டு சொல்றேன்!

நாக்கை துருத்தி காட்டி விட்டு ஆரம்பித்தாள் அபி

நம்ம சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்! சிம்பிளா????

ம்ம்ம்..கிராண்டட்! அடுத்து

ஹனி மூனுக்கு இதே மாதிரி ஒரு காட்டுக்கு போலாம்! ரெண்டு பெரும் சேர்ந்து புல்லா கிளீன் பண்ணி டென்ட் போட்டு சூப்பரா இருக்கும்ல???ஒரு மாசம்??? கொஞ்சம் ஓவரோ??? ரெண்டு வாரம்?

ஹா ஹா ஹா இதுவும் கிராண்டட்! நெக்ஸ்ட்...

பிறகு நாம இப்பிடியே இருக்கணும்! பிசினஸ் பாக்க அம்மா இருக்காங்க ல? நீங்க இப்போ பாக்குறது மாதிரியே உங்க பிசினஸ் சை பாத்துக்கங்க! போட்டோ க்ராபியை மெயின் ப்ரோபெஷன் ஆ வச்சுக்கலாம்! சரியா?? நானும் உங்க கூட எல்லா இடமும் வருவேன்! ரெண்டு பெரும் சேர்ந்து மலையேறலாம், நிறைய இடம்..............

அடிங்....கல்யாணத்துக்கப்புறம் காடு மேடு னு பேச்செடுத்தாலே காலை உடைச்சிடுவேன்!

அதிர்ந்து விழித்தவளைப் பார்த்து மென்மையாய் சிரித்தபடி
இவ்வளவு காலமும் ஆசைக்கு வாழ்ந்தாச்சு. நீயும் நானும் ஒரு குடும்பமா அனுபவிச்சதே இல்லை.இனிமேலாவது நமக்குன்னு குடும்பம் குழந்தைங்க வரணும்! இனியும் ஊர் சுத்த முடியாது! இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும் போட்டோ க்ராபி இனிமே வெறும் ஹாபி மட்டும்தான்! நான் என் ஹோட்டல் பிசினஸ் ல பெரிசா ஜெயிக்கணும்! புரிஞ்சதா??? நீ என்ன பண்ணப்போறே???

அவனை உதறி விட்டு எழுந்து நின்று அஞ்சாறு பாப்பா பண்ணப்போறேன்!என்று கெத்தாய் பதிலளித்துவிட்டு அவள் ஒற்றையடிப்பாதையில் ஓட சிரித்தபடி தன் பொருட்களையும் அடுக்க ஆரம்பித்தான் அனந்தன்!

தன் மேல் விழுந்த மஞ்சள் பூக்களை ஆனந்தமாக உதறி விட்டு அபியின் பின் ஓட்டம் எடுத்தது டைகர்!
முற்றும்!





No comments:

Post a Comment