நாவல்கள்





தனிமையிலொரு தேவதை 


1

1
ச்சே!

அபியின் முகத்தில் ரெண்டு மணி நேரமாய் இந்த கணப்போடு போராடிய எரிச்சல் கோடுகள்! 

வெளியே ஊரே உறைந்து கிடக்க இங்கே அவளுக்கோ குளிர், போட்டிருந்த ஆடைகள் அதன் மேல் போர்த்தியிருந்த கம்பளி எல்லாவற்றையும் மீறி எலும்புகளை ஊடுருவும் போலிருந்தது.

அடுக்கிக்கிடந்த விறகுக்கீலங்களில் ஒன்றை நடுவிலிருந்து எடுத்து மேற்புறமாய் காற்றுப்போகும் படி வைத்தவள் இறுதி முயற்சியாய் தன் சக்தியை எல்லாம் திரட்டி ஊதினாள்.

சட் சட் சட சடவென்று தலையில் லேசாய் பற்றிக்கொண்ட நெருப்புடன் புகைய ஆரம்பித்தது அந்தக்கணப்பு அடுப்பு. 

அப்பாடா என்ற நிம்மதியுடன் நிலத்தில் சாய்ந்து கொண்டவள் கைகளை நெருப்பின் மேல் பிடித்து கசக்கி விட்டுக்கொள்ள ஆரம்பித்தாள். 
இயற்கைக்கதகதப்பு இதமாய் அவளை பற்றிக்கொள்ள ஆரம்பித்தது.

ஜூலியன்! வாடா....

அவள் போர்த்தி விட்டிருந்த கம்பளிக்குள் தன் பெரிய உருவத்தை புதைத்துக்கொண்டிருந்த ஜூலியன் ஒரு கணப்பை பற்ற வைக்க இவ்வளவு நேரமா?” என்பது போல அவளை முறைத்துக்கொண்டு எழுந்து வந்து தன் இருகால்களை நீட்டி பின்னிரு கால்களையும் மடித்துக்கொண்டு அவளருகே நெருப்பின் முன் அமர்ந்தது. புன் சிரிப்புடன் அதன் தலையை வருடிக்கொடுக்க ஆரம்பித்தாள் அபி.

உலகின் நல்ல இன நாய்களின் கலப்பு இது, என் பிரிய நண்பிக்காகஎன்று கூறிக்கொண்டே தந்த மைக்கலின் கைகளில் இருந்து குழந்தையாய் ஜூலியனை வாங்கிய கணம் இப்படி இவனை மட்டும் துணையென கொண்டு புறப்பட வேண்டி வரும் என்று எண்ணிப்பார்த்திருப்பாளா என்ன? இப்போது அவளுக்கென்று இருக்கும் ஒரே பந்தம் இவன் தானே! தலையை நிலத்தில் வைத்துக்கொண்டிருந்த ஜூலியன் இவள் கைகளின் அழுத்தம் கூடியதை உணர்ந்து ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்து தலை சரித்து லேசாய் இவள் கையில் ஈரம் செய்து விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டது.

டேய்!! அவசரமாய் கைகளை துடைத்துக்கொண்டு எழுந்தாள் அபி. இப்போது இவனோடு விளையாடும் பொழுதில்லை. ஹாலில் போட்டுவிட்டதைஎல்லாம் எடுத்து அடுக்க வேண்டும். மின் கணப்பே வேலை செய்யவில்லை! 

மின்னடுப்பு இருக்கிறதோ என்னவோ? ஜூலியன் பசி தாங்க மாட்டான். எதையாவது இரவுக்கு சமைத்ததாக வேண்டும்!

******


அழகான வீடு தான் கொஞ்சம் பழையது தான் என்றாலும்! சின்னதாய் ஒரு சமையலறை குளியலறை, ஒற்றைப்படுக்கையறை என குட்டியாய் ஒரு ஹாலுடன் இருந்த மரவீடு!

கொண்டு வந்த இரண்டு சூட்கேஸ்களையும் பிரித்து சுவரோடு இருந்த பீரோவில் அடுக்கி முடித்து பெட்டியை மூடி கட்டிலின் அடியில் தள்ளினாள் அபி. ஆர்வம் தாளாமல் யன்னலை திறந்தவள் முகத்திலடித்த குளிரையும் மீறி வெளியே நோட்டமிட்டாள். வெளியே கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு பனித்தொப்பி மாட்டிக்கொண்டு நின்ற சவுக்குமரங்கள் தெரிய தூரமாய் ஒரு வீடும் தெரிந்தது. அங்கிருந்து இடது பக்கமாயும் ஒரு வீடு சற்றே தூரமாய் தெரிந்தது. அவ்வளவுதான் ஆள்நடமாட்டமில்லை! தன்னந்தனியாய் அவளது ஜீப் மரத்தினடியில் ஈரமாய் நின்றது.

இந்த வீட்டிலும் ஆட்கள் தங்கி ஐந்து வருடங்களாவது ஆகியிருக்கும்! பெற்றோர் இருந்தபோது விடுமுறை கழிக்க உபயோகித்ததாக தானே ஷெரில் சொன்னாள்.

ஷெரில்... அட ஒரு போன் கூட செய்யவில்லையே! அவசரமாய் தொலைபேசியில் ஷெரிலை பிடித்தாள்.

உன் புதிய நம்பர் தெரியாமல் இவ்வளவு நேரம் முழித்துக்கொண்டிருந்தேன்! இப்போதாவது அழைத்தாயே! வீடு எப்படி இருக்கிறது? எல்லாம் வேலை செய்கிறது தானே! ஹீட்டர் எல்லாம்? வசதியாய் இருக்கிறதா?? பயமாக இல்லைத்தானே! எனக்கு இந்த டெட்லைன் மட்டும் இல்லையென்றால் நானும் வந்திருப்பேன்! ஒரே மூச்சில் முன்னூறு வசனம் பேசிய நண்பியின் இயல்பு புன்னகையை வரவழைத்தது அபிக்கு.

ஹப்பாடா..கொஞ்சம் மூச்சு விட்டுத்தான் பேசேன்!
எல்லாம் ஒகே எந்த பிரச்சனையும் இல்லை! நான் செட்டில் ஆயிட்டேன்! என்னைப்போய் பயமா என்று கேட்கிறாயே!

எனக்கு பயமா இருக்காதா???? சரி ரொபேர்ட் அங்கிள் தான் பக்கத்தில் இருப்பவர் அவரிடம் சொல்லி வைக்கட்டுமா???

வேண்டாம் ஷெரில்.. அவசரமாய் இடையிட்டவள் நானாக சந்திக்கும் போது பார்த்துக்கொள்கிறேன்! அதுவரை நான் யாரையும் பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன்! தேவையில்லாத கேள்விகள் வருமே!

அதுவும் சரிதான்! சாப்பாடு ஸ்டாக் நிறைய கொண்டு போனாய் தானே!

கிட்டத்தட்ட ஒருமாதம் மூன்று பேர் சாப்பிடும் அளவு எடுத்து வந்திருக்கிறேன் ஹா ஹா

அப்பசரி! நீ சாப்பிடு நான் படுக்கபோகும் போது கூப்பிடுகிறேன்!

ஷெரில்...என்று அவசரமாக இடையிட்டவள் வேண்டாம், எனக்கு இனிமேல் நீயாய் போன் செய்ய வேண்டாம்! பிரச்சனை என்றால் நானே கூப்பிடுகிறேன், என் நம்பரையும் அழித்து விடு, புரிந்ததா???? என்று மூச்சுவிடாமல் சொல்லிமுடித்தாள்.

அபி....

அவர்கள் பொல்லாதவர்கள் ஷெரில், முடிந்தளவு ஜாக்கிரதையாக இருக்கிறேன் அவ்வளவுதான்! இரவிரவாய் காடு மலையெல்லாம் எறித்திரிந்தவர்கள் நாம்! என்னை நினைத்தா பயம் உனக்கு??

நீ சொல்வது சரிதான். ஆனால்...

நான் நன்றாகவே இருப்பேன், கவலைப்படாதே! உனக்குத்தான் எப்படி நன்றி சொல்லப்போகிறேனோ தெரியவில்லை..பை டி

சொல்லிவிட்டாளே தவிர உள்ளுக்குள் குளிரடித்தது. அவள் அட்வெஞ்சர் குரூப்பை சேர்ந்தவள் தான், பொழுது போக்காய் மலையேறுவது, காடுகளை கடப்பது என்று கரை கண்டவள் தான், அப்போதெல்லாம் நண்பர்கள் சுற்றி இருந்தார்கள், மகிழ்ச்சி இருந்தது. இப்படி நாளை என்ன ஆகுமோ என்ற பயத்துடன் பனிக்காலம், காடொன்றில் இருந்த பண்ணை வீட்டில் தனியே நாயின் துணையுடன் தங்கியதில்லை, கரையுடைக்க துடித்த கண்ணீரை வலுக்கட்டாயமாய் அடக்கியவள் சமையலறை நோக்கி நடந்தாள்!
சமையலறை மிகவும் எளிமையாக இருந்தது. காம்பிங் வருபவர்கள் பாவிப்பது போல! ஒரு மின்னடுப்பு, தணல் அடுப்பு இடையிடையே மாட்டிக்கொள்ள கிரில்களுடன், மிகப்பெரிய குளிர்சாதனப்பெட்டி, கத்தி கரண்டி இத்யாதிகள் அவ்வளவு தான்!


மின்னடுப்பில் இருந்ததில் பெரிதாக இருந்த பாத்திரத்தை ஏற்றி நீர் விட்டு கால்கிலோ இறைச்சியை துண்டுகளாக்கி வேகவிட்டாள், ஓரளவு வெந்ததும் உப்பு, தூள் சேர்த்து ரைஸ் பக்கற்றையும் உடைத்து சேர்த்து கலந்த சாதம் என்று நினைத்தபடி மூடியிட்டாள். ஜூலியன் பிரச்சனை தீர்ந்தது! 

மனுஷன் கூட இப்படி பார்க்கமாட்டான், லேசா உப்பு போடாததுக்கு முகத்தை திருப்பிக்கிட்டு போகுது பாப்பா!செல்வியின் குற்றச்சாட்டு ஞாபகம் வந்தது! இன்று இதை அவன் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை!

தனக்கு என்ன செய்வது?????? குளிர்சாதன பெட்டியை ஆராய்ந்தவள் சோம்பலாக இருக்கவே பாணையும் சீசையும் மட்டும் எடுத்துக்கொண்டவள்
இறைச்சி தான் சாப்பிட மாட்டே, முட்டையாவது சேத்துக்க பாப்பா..வறட்டு வறட்டுன்னு ரொட்டியையே சாப்பிடாம.... செல்வியின் குரல் மீண்டும் மனதில் வர 

வாணலியை தேடி எடுத்து கழுவிக்கொண்டு மறு அடுப்பில் ஏற்றி முட்டையை ஊற்றி, பெப்பர், சால்ட் தூவி விட்டு பாண் துண்டுகளோடு டோஸ்டரை நோக்கிப்போனாள் அபி

பாவம் செல்வி திடீரென்று ஜீப்பில் அழைத்துவந்து ஒரு லட்சம் பணம் கொடுத்து ஊருக்குப்போகச்சொன்னதும் பயந்தே போய் விட்டாள்.

ஓரளவு நிலைமையை எடுத்துச்சொல்லி நிலைமை சீராக உன்னை வந்து அழைத்துப்போகிறேன் என்று சொன்னாலும் சமாதானமாகாமல் பெண்பிள்ளை தனியா எங்க போவே, நானும் கூட வாரேன், என்று அடம்பிடித்தவளை சமாதானம் செய்ய அவள் பட்ட பாடு! அபியை வளர்த்தவள் அல்லவா? 

இன்னொருவர் கூட இருபது யானை பலம் தான், ஆனாலும் அந்த அப்பாவி பெண்மணியை இந்த பிரச்சனையில் உள்நுழைப்பது சுயநலமாய் பட்டது!

ஜூலியன் உணவில் இருந்து லேசாய் ஒரு வாடை வர சிந்தனைகளிலிருந்து மீண்டவளாய் அவசரமாய் அதை நோக்கி ஓடினாள் அவள்.

*************

நாளைக்கு ரெசிப்பி பார்த்து செஞ்சு தரேண்டா..

இன்னிக்கு ஒருநாள் தானே!

பசிக்கலையா உனக்கு?

நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்??? 
தெரியலடா!

இன்னிக்கு ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ண மாட்டியா?? 
நீ இப்பிடி இருந்தா நான் எப்படி சாப்பிடுறது????’

அபியின் சமாதானங்களை கேட்பேனா என்பது போல தட்டின் முன்னே தலையை வைத்துக்கொண்டு சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்தது ஜூலியன்.

நானும் டேஸ்ட் பண்ணி பாத்தேன், நல்லா தான் இருந்துது! உனக்கு வேணாம்னா எனக்கும் வேணாம். போர்க்கையும் ஸ்பூன் ஐயும் தட்டில் எறிந்து விட்டு கணப்பின் முன்னே போர்வைக்குள் சுருண்டு கொண்டாள் அபி.

ஏற்கனவே ஆயிரம் பிரச்சனை, அதில் இவன் வேற!

ஒரு பத்து நிமிடங்கள் கழித்து லேசாய் முனகிக்காட்டி விட்டு ஜூலியன் தன உணவை உண்ணத்தொடங்க அபியும் சந்தோஷமாக ஓடிவந்து அந்தப்பெரிய நாயை அணைத்து விட்டு தன் தட்டை எடுத்தாள்.

மெதுவாய் உண்ணத்தொடங்கிய ஜூலியன் பின் வேகம் கூட்டி முழுவதையும் முடித்துவிட இவள் மீதி உணவையும் முழுவதுமாய் தட்டில் போட்டு விட்டாள். காலையில் இருந்து இருவரும் முழுதாக சாப்பிடவில்லையே!

சாப்பிட்டு முடித்து எல்லாவற்றையும் சுத்தம் செய்தவள் எங்காவது doggy door இருக்கிறதா என்று வீடு முழுதும் தேடினாள், இல்லை! 

இருந்தாலும் அதற்குள் ஜூலியன் புகுவது சந்தேகம் தான்!

நான் கதவை திறந்து விடுறேன், ஷூ போயிட்டு வந்திர்றையா?? என்று கேட்டபடி கதவைத்திறந்து அவனை வெளியில் விட புரிந்து கொண்டதாய் உடலை ஒருதடவை உதறிக்கொண்டு குடுகுடுவென வெளியே ஓடியது ஜூலியன், குளிர் உள்ளே வராமல் கதவை சாத்தி வைத்துக்கொண்டு டிவியில் என்ன சனல் வருகிறது என ஆராய்ந்தாள்! 

மியூசியத்தில் வைக்கவேண்டிய டிவி! அதில் வந்த சானல்களும் அப்படியே தான் இருந்தன.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி....கண்ணம்மா...
தன்னையே ஷஷிஎன்று சரணம் எய்தினேன்...கண்ணம்மா கண்ணம்மா

தமிழ் மாலையில் உன்னி உருகிகொண்டிருக்க ரிமோட்டை போட்டுவிட்டு கண்களை மூடிக்கொண்டாள் அபி!

:
உன்னை ஒருத்தர், அவனுக்கென்ன மரியாதை??? ஹா ஹா ஒருத்தன் விரும்பி கட்டித்தர சொல்லி கேக்கிறான் கண்ணா.. அவனுக்கென்ன சொல்லட்டும்??? என் பொண்ணு இப்போ எந்த காட்டில இருக்காளோ தெரியலை. வந்ததும் நீயே பேசு னு சொல்லிடட்டுமா??” 

அபிக்குட்டி,கண்ணம்மா என்னடா பேசாம இருக்க??

இப்படிகிண்டல் பண்ணினா நான் என்ன பேசுறதாம்???? 

அப்பா அப்பா..இப்ப நீங்க தான் பேசாம இருக்கீங்க!

அத்தோடு அறுந்து போன தொடர்பு...அதைத்தொடர்ந்த சம்பவங்கள்... 

நினையாதே மனமே,,நினையாதே!

ம்ம்..ஹ்ம்ம்

ஜூலியன்!!!!!!!!!!! அவன் சத்தம் தானே! போய் இவளவு நேரம் ஆகிறதே! ஏன் அழுவது போல சத்தமிடுகிறான்??? கதவை அகலத்திறந்து கொண்டு வெளியே ஓடினாள் அபி!


No comments:

Post a Comment