Wednesday, August 15, 2012

நான் உன் காதலன் II







சாகசங்கள் பல செய்து முதலில் உன் அண்ணன்கள் அப்புறம் அப்பா.அப்பாடா அதற்குள் நான் பட்ட பாடு! குடும்பமாய் என் அன்னையும் தந்தையும் உன் அப்பாவும் அண்ணன்களும் கலந்து பேசி உனக்காய் என்னை முடிவு செய்த பின்னர் தானடி உன் புன்னகை எனக்கு கிடைத்தது.திருமணம் வரையான அந்த ஒரு மாதம் அளந்து வைத்துத்தான் தொலைபேசியிலும் பேசுவாய்.அனாவசிய கூச்சமில்லாத சகஜமான உன் பேச்சு அடுத்த விடயம் இன்றி என்னையே தவிக்க வைத்து goodnight சொல்லவைக்கும். "வாடி என்னிடம் மாட்டத்தானே போகிறாய், அப்போது சொல்கிறேனடி எல்லாவற்றுக்கும் பதில்" என் ஆண்மனம் கருவிககொள்ளும். என் காதலால் உன்னை பழி வாங்க வேண்டும், காதட்கோல் கொண்டு உன்னை அடக்கும் ஆசானாய் மாற வேண்டும் . சேமித்து வைத்த ஆசைகள் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்க என் கண்களோ உனக்காய் காத்து பூத்துப்போயின.அரை மணி நேரமாய் என்னதான் செய்கிறாய்? இன்றுதான் உன்னை முதல்முறை சேலையில் கண்டேன். நீ இவ்வளவு அழகா?அடிக்கடி அதை கட்டினால் தான் என்ன? பிடிவாதமாய் உனக்கு சேலை கட்டி விடும் கனவுகளும் என் காதல் கோட்டையில் இணைய சிரித்துக்கொகிறேன்.
உஷ்.....நீ வருகிறாய் போலிருக்கிறது.மென் பேச்சு குரல்கள் வெளிப்புரமிருந்து வர  திறந்திருந்த யன்னல் வழி குளிர்காற்று நுழைந்தது. அடடா வரவேற்பை பாரேன் ! என் உள்ளம் துள்ளியது. நீதான் .திரைசீலையை தள்ளி விட்டு உள்ளே நுழைந்தாய். திடுக்கிட்டுப்போனேன். எங்கேயடி அந்த நீலப்புடவை? அடிபாவி இன்றுகூடவா இப்படி? நீ அலங்காரம் செய்கிறாய் என நான் நினைத்துக்கொண்டிருக்க நீ அதைக்கலைக்கவல்லவா இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறாய்! கழுத்தில் பூக்களிட்ட அந்த அழகான டீசேர்ட் கூட உனக்கு அழகூட்டினாலும் மனம் அந்த நீலப்புடவைக்காய் ஏங்கியது! நான் ஒன்றும் பேசவில்லை.நீயே பேசு.சகஜமான சிரிப்புடன் கதவைத்தாளிட்டு உள்ளே வந்தாய். வெட்கத்தின் அறிகுறியை முகத்தில் தேடினேன். அறிகுறியே இல்லை!
"நிறைய நேரம் வெயிட் பண்ணினீங்களா? காலைல இருந்து ஒரே அலுப்பு தானே" இது நீ.
"சீ..இப்பத்தான் வந்தேன்.இந்தப்புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்தேன் .நீயே வந்து விட்டாய்.." இது நான்.
"டேய்! நீ அந்தப்புத்தகத்தையே இப்பதான் பார்க்கிறாய்! ஏன்டா இப்பிடி?" இது என் மனசாட்சி!
"கோபத்தை குறையுங்கள்" என்பதாய் தலைப்பிட்டிருந்த அந்தப்புத்தகத்தை பார்த்து புன்னகைத்தாய்.
"சித்தி சாரி கட்ட சொன்னா, நான் தான் கேக்கலை.மாத்திட்டு வந்திட்டன்.நீங்க ஒண்டும் நினைகேல்லை தானே.sorry"
"இதுக்கெல்லாம் சாரி கேப்பியா? அசடு! இது என்ன பழங்காலமா? சாரி உடுத்தி கால்ல விழுறதுக்கு" நான் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். "அடப்பாவி! எண்டா இப்பிடி மானத்தை வாங்கிறாய்?" என் ஆண்மனம் தலையில் அடித்துகொண்டது. ஆரம்பத்திலேயே என் பிடிவாதத்தை காட்டக்கொடாது தானே அதனால் தான் என்று என் காதல் மனம் பதில் சொல்ல " நம்பிட்டன்" என்றது அது நக்கல் சிரிப்புடன்.

No comments:

Post a Comment