என் பக்கத்தில் அமர்ந்து கொண்டாய்.என் காதல் உன் மடியில் உட்காரத்தவித்தது.பேசினோம் ,பேசினோம்.உன் கண்களும் குரலும் காந்தமாடி?என்னை உனக்குள்ளே விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தாய்! என் காதலின் தவிப்புக்கள் ஒவோன்றாய் மறைய நான் சிறகில்லாமல் மிதந்தேன்.மெல்லக்கேட்டேன். "இத்தனை ஆண்டுகள் ஏனடி என்னை தவிக்க விட்டாய்?,என்னை புரியவில்லை என்று மட்டும் சொல்லாதே.எனக்கு தெரியும்."
வெட்கம் கலந்த புன்னகை முகத்திலடிக்க சிரித்தாய்.
"விருந்து இருக்கிறது என்று தெரிந்தால் மட்டும் சாப்பிட போக முடியுமா? அழைப்பு வேண்டாமா? சமைத்து வைத்தவர் சாப்பிட அழைத்தீர்களா? " உள்ளடங்கிய உன் குரல் ஆதங்கமாய் கேட்டது.
"அப்படியானால்???" என் காதல் கால்மேல் காலிட்டு அமர்ந்து கொண்டது. இந்த ஒரு கணப்பரவசத்துக்காக ஏழு ஜென்மம் படலாமடி நாய் படாப்பாடு!
இதோ உன் தூக்கத்துக்காக வெளிச்சத்தை வெளியேற்றி இருளை வரவேற்கிறேன். goodnight சொல்லி என் கன்னத்தை தட்டி விட்டு தூங்கத்தொடங்கினாய். சாப விமோசனம் பெற்ற பெருமிதத்தில் சிவந்தது அது.நானும் வருகின்றேன் என்று என் கை நீண்டு உன் தலை தடவ உன் நெற்றியை ஒற்றி பெருமிதமடைகிறது என் உதடுகள்!
ஒரு வெட்கச்சிரிப்புடன் நீ தூங்கத்தொடங்கினாய்.இரவில் இருளில் வரிவடிவமாய் உறங்கும் என் அத்தனை கனவுகளுக்குமான செல்ல ராட்சசியை பார்த்தபடி தூக்கமா விழிப்பா என்று தெரியாத நிலையில் என் அத்தனை தவிப்புகளும் அடங்கிப்போக பரவசமாய் விழிகளை மூடுகின்றேன், என் தேவதையுடனான என் முதல் நாளை தொடங்க!
ஆணொருவன்
அவன் எத்தனை பெரியவனாய் இருந்தாலும்
அவன் காதலிக்கும் பெண்மைக்குள் அடங்கிப்போய் விடுகின்றான்!
அப்படி அட்ங்கிப்போகத்தான் அவனும் விரும்புகிறான்.
காதல் அவன் திமிரையும் ஆணவத்தையும் முறித்துப்போட்டு விடுகிறது
தன்னை அடக்கும் ஒருத்தியை தேடிக்கொண்டிருக்கும் அவன் ஆழ்மனம்
கண்டதும் மேழ்மனமாய் அவளோடு போராடி தோற்றுப்போக
அங்கே அவனுக்கு காதல் பிறக்கிறது
அவன் எத்தனை பெரியவனாய் இருந்தாலும்
அவன் காதலிக்கும் பெண்மைக்குள் அடங்கிப்போய் விடுகின்றான்!
அப்படி அட்ங்கிப்போகத்தான் அவனும் விரும்புகிறான்.
காதல் அவன் திமிரையும் ஆணவத்தையும் முறித்துப்போட்டு விடுகிறது
தன்னை அடக்கும் ஒருத்தியை தேடிக்கொண்டிருக்கும் அவன் ஆழ்மனம்
கண்டதும் மேழ்மனமாய் அவளோடு போராடி தோற்றுப்போக
அங்கே அவனுக்கு காதல் பிறக்கிறது
i cant accept this
ReplyDelete