Tuesday, November 9, 2010

பிம்பங்கள்!





நான் ஒரு சக்திச் சேமிப்பகம் .உலகத்தின் உயித்துடிப்பை எல்லாம் மொத்தமாய் ஆண்டவன் எனக்குள் உயிலெழுதி போயிருந்தான்.நான் பேசினால் மந்திர வார்த்தைகளோ என்று உலகம் என் பின் நடந்து வரும்.பாடினால் கள்ளுண்ட மாந்தராய் யாவரும் களிப்பில் மதி மயங்கி கிடப்பர்.கனவுகள் எனக்கு தேவதை சிறகுகளை கடன் தந்து விட்டிருந்தன.அவைகளோ என் கால்கள் நிலம் தொட நான் விரும்பியும் அனுமதிப்பதில்லை.
எல்லாம் இருந்துமென்ன என்னையும் கட்டிகொண்டிருந்தது ஒரு சங்கிலி.கூவும் குயிலின் குரல அல்லால் குயில் முகம் தெரிந்தோர் எத்தனை பேர்?என் கதையும் குயில் கதைதான்.என் மந்திர கண்ணாடி என் முகம் கண்ட வேளையில் எள்ளி நகையாடும் அந்த கொடூரக்கோலம் சங்கிலியாய் எனைகட்டி இழுக்கும் .

பிம்பங்களின் பின் ஒளிந்து கொள்ள ஆரம்பித்தேன்.அவைகள் கூட முகம் திருப்பிய பிம்பங்களே.என் பயணங்களெல்லாம் நீங்கள் உறங்கியபின் உயிர் பெற்றன..விழித்தெழுந்த    நீங்கள் என் தடங்களை மட்டும் கண்டீர்கள் . வியந்தீர்கள்.
புகழ் என்பதே போதை அல்லவா.ஒவ்வொரு இரவிலும் உங்களுக்காய் உலகை அலங்கரித்தேன்.பாடல்களாய்,கவிதைகளாய் ,தென்றலாய் ,மென் தீயாய்,காலை தழுவும் சின்னக்கடலலையாய் அரூபமாய் உங்களோடு இரண்டர க்கலந்தேன்  .நீங்களும்  என்னைப்பற்றியே பேச ஆரம்பித்தீர்கள்.உங்கள் பத்திரிகைகள் என் புகழ் பாடின.உங்கள் வானொலிகள் என் பெயர் சொல்லி மாய்ந்து போயின,பல்கலைகளில் கூட நான் பாடமானேன்.

                                                
         நான் மகிழ்ந்து போனேன்.மந்திர கண்ணாடியைக்கூட   பழிக்கும் அளவுக்கு எனக்கு தைரியம் வந்திருந்தது.அன்றொரு நாள் எனக்கு விழா எடுக்க உலகையே அழைத்தீர்கள்.போதும் என் கானகவாசம் என்று நானும் வந்தேன்.
படும் பட்டடையுமாய் அந்நிய ஆடைகளில் என் பெயர் பொறித்து நடனமாடிநீர்.எனக்குள் எதோ கழன்று கொண்டது.என்னைப்பற்றி பலர் பேசினார்.உலகமாதா,காதலி,மகள்,தேவதை.எத்தனையோ அடைமொழிகள்.மறுபடியும் எனக்குள் மந்திரக்கன்னடியின் சிரிப்பு.
யாரோ ஒருவன் என் ஓவியம் வரைந்திருந்தான்.வானத்து தேவதையாய்.நீங்கள் வெறிகொண்டு ஏதேதோ பெயர்களில் என்னை அழைத்தீர்கள்.நிறுத்துங்கள்!என் வாய் பேசிட்ட்ரோ? ஈயாடவில்லை எங்கும்.
அவள் போலில்லை இது.அவள் அகம் கொள்ளை அழுகுதான்.புறம் அல்ல.நாவடக்கம் பேண முயவில்லை என்னால்.
எப்படித்தெரியும் உன்னக்கு?கேள்விகள் தெறித்தன.எங்கள் தேவதையைப்பளிக்க என்ன தைரியம் உனக்கு?கொலைவெரியாய் பாய்ந்தீர்கள்.
ஏனென்றால்...ஏனென்றால்..அது நான்தான்.உடலோடு கூட என் மந்திரக்குரலும் நடுங்கிற்று.
தூஷணம் பேசுகிறாள் அவளைக்கொல்லுங்கள்.கோஷங்கள் கிளம்பிற்று.எங்கள் தாயைப்பளிக்கிறாயா?உங்கள் கற்கள் எனைபதம் பார்த்தன.அலறக்கூட வஎலவில்லை எனக்கு. என் குரல்வளையை நசித்தீர்கள். நான் இறந்து போனேன்.உங்கள் கோபம் தீரவில்லை.தசைகள் சிதறும் வரை சிதைத்தீர்கள்.நாலாபுறமும் சிந்திய என்னிரத்தம் கூட உங்கள் கொபத்தணலில் ஆவியாகிப்போனது.ஒரு சொட்டுக்கண்ணீர் என் மீது சிந்திற்று.மௌனமாய் அழுது கொண்டிருந்தது என் மாயக்கண்ணாடி!

1 comment:

  1. பாடினால் கள்ளுண்ட மாந்தராய் யாவரும் களிப்பில் மதி மயங்கி கிடப்பர்... lol I'm happy for u my sis :) weldone !!!!

    ReplyDelete