Monday, November 24, 2014

உப்புமாவின் ஓரவஞ்சனை!!!





காலம் காலமாய் தனியாக இருக்கும் ஆண்கள் பெண்கள் எல்லோருக்கும் வாழ்வளிக்கும் உப்புமா எனக்கு மட்டும் தகராறு  செய்வதன் காரணம் புரியாமல் மனம் நொந்து வெந்து நான் போடும் பதிவு இது!

சிறுவயதில் அம்மா கையால் சாப்பிட்டது, பிறகு ஹாஸ்டலில் தோழிகளோடு இருக்கும் போது செய்ய சுலபமான உணவு மற்றும் பாத்திரங்கள் குறைவாக தேவைப்படும் உணவு என்று அடிக்கடி தயாரிப்பது, ஏன் எங்கள் வீட்டுக்கு முதல் நாள் வந்தபோது நானும் என் பிராண நாதரும் முதன் முறையாக தயாரித்த உணவு இப்படி ரவா உப்புமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு காலம் காலமாக தொடர்வது! இறுகியது! மொத்தத்தில் துரியோதனனும் கர்ணனும் போன்றது!


பட உதவி : கூகிள்!

அப்படிப்பட்ட உப்புமாவுக்காக நீ ஏன் இப்படி ஒரு வேதனை பதிவு போடுகிறாய் என்று நீங்கள் கேட்கக்கூடும்! அங்கே தான் முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது!பலருக்கு செய்யும்  போது நன்றாகவே வரும் உப்புமா, அதுவும் என் பிராண நாதர்  கேட்டு வாங்கி உண்ணும் அளவுக்கு நன்றாகவே வரும் உப்புமா நான் தனியாக இருக்கும் போது எண்ணி ஒரு தடவை கூட சரியான உப்புமாவாக வந்ததே இல்லை! என்ன கொடுமை பாருங்கள்! அதுவும் நேற்று நான் கடும்பசியில் வீடு வந்த போது இந்த உப்புமா என்னை இப்படியா பழிவாங்க வேண்டும்?

பொதுவாக உப்புமா என்றால் அம்மா வெஜிடபிள் உப்புமாவாக தான் செய்வார். நானும் அதையே தான்  பின்பற்றுவது வழக்கம்! தனியாக இருக்கும் போது என்னால் ஒருநாளும் அம்மா செய்யும் உப்புமாவை செய்ய முடிந்ததே இல்லை! ஏன் வழக்கமாக நான் செய்யும் உப்புமாவை கூட என்னால் செய்ய முடிவது இல்லை. நேற்று என் உப்புமா வரலாற்றிலேயே மோசமான தினம்! நேற்றும் அதையே தான் செய்தேன். நாளை மாலை சமைக்கும் வேலையை மிச்சமாக்குகிறேன் என்று அதிகமாக வேறு செய்ய ஆரம்பித்து விட்டேன்! இறுதியில்  உப்புமா கூழ் ஆக வந்து விட்டது. கெ ட்டியாக்குவற்காக ரவாவை சேர்த்து என்ன செய்தாலும் இறுதியில் பேஸ்ட் ஆக வந்து நின்றது! நேற்று என்று பார்த்து என் பிரிட்ஜ்  இற்குள் வெறும் டின் பிஷ் மட்டுமே இருக்க அதற்கு பிறகு புதிதாக எதையேனும்  தயாரிக்கும் அலுப்பில் மைலோ வை தயார்செய்து அந்த உப்பு மா கூழ் ஆறுமுன் மைலோவோடு சேர்ந்தது விழுங்கி முடித்து விட்டேன்!

பாம்பே வெங்காயம் ,கடுகு,  குடை மிளகாய் ,காரட் , கத்தரிக்காய், உருளைக்கிழங்கு பொரியல் என அம்மா சேர்க்கும் அத்தனையையும் நான் சேர்த்தேனே என்று கேட்க அம்மா சொன்னார், நீ ரவையை சரியாக வறுத்திருக்க மாட்டாய் என்று! கிழிஞ்சது! நான் இருந்த பசியில் அது சாத்தியம் தான் ஆனாலும் இந்த உப்புமாவுக்கு எங்கே போனது அறிவு? பாவம் பசி என்றாவது அது என்னை கன்சிடர் செய்திருக்கலாமில்லையா? அதனால் தான் மனம் வெந்து நொந்து இந்த பதிவை எழுதினேன். உப்புமாவை தோழமையாக எண்ணி எனக்கு ஏற ஏற்பட்ட மனக்கஷ்டத்துக்கு எந்த கோர்ட்டிலாவது கேஸ் போட முடியுமா என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். இந்த பதிவை படிக்கும் உப்புமா வல்லுனர்கள் தங்கள் ஆலோசனையை சொன்னால் மகிழ்வேன்!

படிப்பவர்கள் உங்களால் முடிந்தால் உப்புமாவிடம் "நான் இன்னும் அதனை நேசிக்கிறேன். விரிசல் விழுந்துவிட்ட உறவை மேம்படுத்த நான் தயாராகவே இருப்பதாக இருக்கிறேன்" என்று சொல்லி விடுங்கள்.

2 comments:

  1. Hehehe.. Uppumaa athai nee panninathu romba thappumaa ;)

    ReplyDelete
    Replies
    1. he he he appo antha sariyaana formulaa va konjam solrathu! :P

      Delete