Saturday, February 9, 2013

மீண்டும் நான்!






நீண்ட தூரம் போகும் பாதை ஊரைசேருமா?” இப்போதெல்லாம் எனது லேப்டாப்பில் அடிக்கடி இந்த பாடல் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிகொண்டிருந்த என் வாழ்க்கையில் ஒரு நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. அடுத்த காலடி எந்த திசையில் என்பதை தீர்மானிக்க முடியாத ஒரு கையாலாகாத்தனத்துடன் என் வாழ்க்கையையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் பதினான்கு மணி நேரங்கள் இன்டர்நெட்டுடன் தான் செலவாகின்றன. இந்த கால கட்டத்தில் எத்தனை பதிவர்கள் எத்தனை விதமான எழுத்துக்கள் அப்பப்பா! எனக்கும் ப்ளாக் ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது. ஹா ஹா அது விளையாட்டாக ரெண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது. பதிவுலகம் அப்போது தான் எனக்கு அறிமுகமானது. அனேகமாக லோஷன் அண்ணாவை வாசித்த பாதிப்பு தான் நாமளும் எழுதலாமே என்று ஆரம்பித்தது. அப்போது கவிதை என்ற பெயரில் எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன். தொடர்கதைகள் ஆரம்பித்து கொஞ்ச நாள் எங்கள் லெச்ஷர் ஹால் முழுதும் சுற்றி வந்து கொண்டிருக்கும்! பிறகு அசைன்மென்ட்அது இதென்று போய்விட அப்படியே போட்டு விடுவேன். ஒரு தொடர்கதையையும் உருப்படியா முடித்ததாக சரித்திரமே கிடையாது. ஆனாலும் சொன்னால்  நம்பமாட்டீர்கள், எனது எழுத்து நடைக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்று நினைகிறீர்களா? ஹி ஹி மறுபடியும் ப்ளோகில் எழுதப்போகிறேனே! கிழிஞ்சுது என்று நீங்க மைன்ட் வாய்ஸ்ல கத்துறது கேக்குது. ஆனாலும் குட்டி சப்போர்ட் தர மாட்டிங்களா என்ன!

No comments:

Post a Comment