Tuesday, August 14, 2012




















என்ன நினைத்தாய் என்னை?
வா என்றால் சேர்ந்து கொள்ளவும்
போ என்றால் விலகிச்செல்லவும்
உன் கடைக்கண் பார்வைக்காய்
தாகம் கொள்கிறது
சுருண்டு வெடித்துப்போன என் மனம்
இரக்கமே உருவான மென்மலர் கண்ணன் நீ
பச்சைத்தண்ணீர் தராத கொடியவனாய்
எப்படி மாறி போனாய்?
வெள்ளை குதிரைமேல் வந்து
என் மனம் கவர்ந்தானை
அள்ளிப்போவேநென விளையாட்டாய் சிரிப்பதுண்டு சிறுவயதில்!
காற்றைப்போல வந்து என்
உள்ளம் அள்ளிப்போனாய்
முறையீடு செய்யவும் பிடிக்காமல்
முனகிக்கொண்டிருக்கிறேன் இன்று!
உன் சட்டையைப்பற்றி நாலு கேள்வி கேட்கக்கிளம்பினேன்
உன் கேள்விப்பார்வையில்
உடலோடு மனமும் சுருண்டு போக
உன் கைகளிலேயே விழுந்தேன்!
ஆண்டவனுக்கு ஏதும் லஞ்சம் கொடுத்தாயா?
உன் பக்கமே சாய்ந்து கொண்டிருக்கின்றான்
இப்போதெல்லாம் பூக்களில் பாதியைத்தான் அவனுக்கு கொடுக்கிறேன்!
உன் விருப்பத்துக்கு ஆடுகிறானல்லவா?
மீதிப்பூக்களை உன்னிடமே வாங்கி கொள்ளட்டும்!.

No comments:

Post a Comment