
நீச்சல் குளம் வந்து மூன்று நாட்கள் ஆகவில்லை
உனக்கு தீனி போதாதென்று
என் பயிற்சியை நிறுத்துகிறாய்!
வான்வெளியில் சூரியன் வேலை நிறுத்தம் செய்தால்
பூமிகளின் கதி என்ன?
இயங்காத நாட்களில் தொலைந்து போன
மணித்துளிகளுக்கு பதில் கூறுவது யார்?
தக்கதாய் இல்லாததால் மக்கிப்போன
புல் பூண்டுகளுக்கு பதில் சொல்வதுதான் யார்?
இதோ இறால் குஞ்சுகளும் நண்டு குஞ்சுகளும்
வீடு கட்டி கொண்டிருக்கின்றன எனக்கான இடத்தில்!
சுறாக்கள் துரத்தும் உலகத்தில்
உன் தீனி அதிகரிப்பை விட
எனக்கு என் நீச்சல் பயிற்சி முக்கியமானது.
உனக்கோ உன் குஞ்சுகள் !
எனக்கு நீ தேவை உனக்கோ அவன் தேவை
அவனுக்காக நீ என்னை ஸ்தம்பிக்க செய்கிறாய்.
நாளை நான் கூட ஏதேனும் முட்டைகளை
ஸ்தம்பிக்க செய்யலாம் உனக்காக!
உனக்கும் நியாயம் வேண்டும்
நானும் ஆதரிக்கிறேன் அனால்
ஒன்றை மட்டும் நினைவில் கொள்
உனக்கென்று ஒரு கடல் இருக்கிறது
தொழில் இருக்கிறது உன்னை நம்பி
ஆயிரம் மீன்குஞ்சுகள் இருகின்றன.
அனால் எனக்கான கடலை
இனிமேல் தான் நான் தேடிக்கொள்ள வேண்டும்.
என்னை பார்த்து விட்டு இனிவரும் குஞ்சுகள்
வெறும் கிணற்றோடு நீச்சலை நிறுத்தினால்
உன்னை சேராதா பழி?
No comments:
Post a Comment